ட்ரெண்டிங் ஆகும் விஜய் பேசிய நண்பர் அஜீத் வார்த்தை

நேற்று நடந்த மாஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் எப்போதுமே தான் சரியான உடை அணியவில்லை என பலரும் சொல்லி வருவதாகவும் அதனால் தான் நண்பர் அஜீத் அணிவது போல அடை அணிந்துள்ளேன் என…

நேற்று நடந்த மாஸ்டர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் எப்போதுமே தான் சரியான உடை அணியவில்லை என பலரும் சொல்லி வருவதாகவும் அதனால் தான் நண்பர் அஜீத் அணிவது போல அடை அணிந்துள்ளேன் என கூறினார்.

6509191c3dbd29214916afb749c39624

அஜீத் போடும் கோட் போல விஜய் அணிந்து வந்தார் விஷயம் இவ்வளவுதான். ஆனால் இது டுவிட்டர் ட்ரெண்டிங்கில் டாப்பாக உள்ளது.

ஏனென்றால் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அஜீத்தும் விஜயும் நண்பராக இணைந்துதான் நடித்தனர். ஆனால் அதற்கு பிறகு இருவருக்கும் மார்க்கெட் ஏறிய பிறகு ரசிகர்கள்தான் இவர்களை பிரித்தார்களே ஒழிய இவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இணைய வெளி என்று எடுத்துக்கொண்டால் அஜீத், விஜய் ரசிகர்கள் சண்டை எல்லை மீறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜீத் பற்றி எதுவும் வாய்திறந்து பேசாமல் இருந்த விஜய் சில வருடங்களுக்கு பிறகு நண்பர் அஜீத் என்ற வார்த்தையை யூஸ் செய்த உடன் அந்த வார்த்தையையும் ட்ரெண்ட் ஆக்கி விட்டனர் ரசிகர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன