கொரோனா விழிப்புணர்வுக்காக யாரும் வெளியில் கூடக்கூடாது என்று சொல்லியும் அந்த உத்தரவை மதிக்காமல் பலர் திரியும் இந்த வேளையில் இயக்குனர் மணிரத்னம் நடிகை சுகாசினி தம்பதிகளின் மகனான நந்தன் லண்டன் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன் வந்திருக்கிறார்.
தான் லண்டன் சென்று வந்ததால் கொரோனா பாதிப்பு தான் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என பலருக்கு முன்னுதாரணமாக வீட்டுக்குள்ளேயே தன்னை தற்காத்துக்கொண்டுள்ளார் இவர். யாருடனும் சேராமல் தனி கண்ணாடி அறையில் இவர் உள்ளார்.
இதை சுகாசினி மணிரத்னம் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.