உடல்நிலை காரணமாக வெளியில் அதிகம் கலந்துகொள்ளாத நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை நடிகர் யோகிபாபு நேரில் சந்தித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை குறிப்பிட்ட சிலரோடு குலதெய்வம் கோவிலில் நடந்தது.
திரைப்படத்துறையினர் பலரும் இதில் கலந்து கொள்ளாததால் அடுத்த மாதம் எல்லோரும் கலந்துகொள்ளும் வகையில் சென்னையில் வரவேற்பு நடைபெறுகிறது.
இதற்கான அழைப்பிதழை பூ பழம் பாக்கு வெற்றிலையுடன் நேரில் சந்தித்து அழைத்து தன் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளுமாறு யோகிபாபு கூறி இருக்கிறார். விஜயகாந்தும் வருவதாக சொல்லி இருக்கிறாராம்.