தமிழகமே கொரோனா பரபரப்பில் இருந்து வரும் நிலையில் நடிகர் யோகிபாபு தனது திருமண வரவேற்புக்கு பத்திரிகை கொடுக்கும் மும்முரத்தில் உள்ளார்.
நேற்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை யோகிபாபு நேரில் சந்தித்து, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கொடுத்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களை சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை கொடுத்தார்.
அதேபோல் இன்னும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது