நேரக்கட்டுப்பாடு குறித்து நடிகை கஸ்தூரி அதிருப்தி

21 நாள் தொடர் ஊரடங்கை இந்திய மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். அதிக அளவில் பொருட்களை வாங்க மக்கள் கூடுவதால் எல்லா இடமும் கூட்டம் வருகிறது. போலீசார் இவர்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். இந்நிலையில்…

21 நாள் தொடர் ஊரடங்கை இந்திய மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். அதிக அளவில் பொருட்களை வாங்க மக்கள் கூடுவதால் எல்லா இடமும் கூட்டம் வருகிறது. போலீசார் இவர்களை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல்வர் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் மதியம் 2.30 வரைதான் மளிகை கடை உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்.

a18f0d397457a7cf7650c3817f38261f-1

இந்த நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.

அத்திவாசிய பொருட்கள், காய்கறி, மளிகை மற்றும் பெட்ரோல் நிலையங்களுக்கு அரசு அறிவித்திருக்கும் நேரக்கட்டுப்பாடு கூட்ட அபாயத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது. மக்கள் முண்டியடிப்பார்கள்.குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து வைப்பது கடை சிப்பந்திகளுக்கும் மிகுந்த சிரமம். இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன