சீன அதிபருக்கு கடிதம் எழுதலாமே- கமலை விமர்சித்த காயத்ரி

அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வகையில் கடந்த ஞாயிறு இரவு 9 மணியளவில் அனைவரும் விளக்கேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையை ஏற்று அனைவரும் விளக்கு ஏற்றினர். இதை…

அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் வகையில் கடந்த ஞாயிறு இரவு 9 மணியளவில் அனைவரும் விளக்கேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார்.

a777e645e3ea597d62ca2d22901b126f

பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையை ஏற்று அனைவரும் விளக்கு ஏற்றினர்.

இதை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடுமையாக எதிர்த்துள்ளார். கடந்த முறை உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்சினைகளை சந்திக்கும் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னாவது, ஏழை மக்களை புறக்கணித்து விட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் இருக்கிறீர்கள் என கமல் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதனை நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் கடுமையாக எதிர்த்துள்ளார். நீங்க ஏன் சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கும் தப்லிக் இ ஜமாத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது என கமலுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் இவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன