பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரன் இவர் நிறைய நாடகங்களை இயக்கியுள்ளார். மேடை நாடகங்களை சென்னையில் நடத்தியும் வருகிறார். அந்த காலத்தின் சிவாஜி, ரஜினி,கமல் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் சேர்ந்து இணைந்து காமெடி செய்துள்ளார் இவர். இவர் நடிகர் மட்டுமல்லாது ஒரே ஒரு சினிமாவை இயக்கவும் செய்துள்ளார்.
இவர் ஒரே ஒரு படம் மட்டும் இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் 1987ம் ஆண்டு வெளிவந்த கதைகதையாம் காரணமாம் என்ற திரைப்படமாகும்.
ஒரு சஸ்பென்ஸ் திரைப்படமான இந்த படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. ஒரு கதாசி ரியர் எழுதிய கதையின் அடிப்படையில் ஒரு உண்மை கொலை நடப்பதை மிக சுவாரஸ்யமாக இயக்கி இருப்பார் ஒய்.ஜி மகேந்திரன்.
ராஜீவ் மற்றும் பல்லவி,ஜெய்சங்கர் நடிப்பில் உருவான படமிது.