நடிகை ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தமிழ் தெலுங்கில் மிகப்பெரும் பெயரெடுத்து இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து ஆந்திர அரசியலில் கால் வைத்து இன்று ஆந்திராவில் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் இவர்.
இவர் தமிழில் ஆரம்ப காலத்தில் நடித்த சமயத்தில் மிக பிஸியான நடிகையாக இருந்தவர். பிரசாந்த், கார்த்திக்,பிரபு, சத்யராஜ் என அந்நாளைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ஆடியவர் இவர்.
இவர் நன்றாக நடித்து கொண்டிருக்கும்போதே சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இவர் தயாரித்த திரைப்படம்தான் அதிரடிப்படை.
1994ம் ஆண்டு வந்த திரைப்படத்தை ரோஜாவின் கணவர் ஆர்.கே செல்வமணிதான் இயக்கி இருந்தார். இப்படத்தின் கடும்தோல்வியால் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவரிடம் கடன் வாங்கி அடிக்கடி கோர்ட் படிகளுக்கு ஏறி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் இவர். இந்த காலக்கட்டதிலேயே தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.