ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. பிரின்ஸ் மகேஷ்பாபு என அழைக்கப்படும் இவருக்கு நம்ம ஊர் அஜீத் விஜய் ரேஞ்சில் எக்கசக்க ரசிகர்கள் உள்ளனர்.
இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே நம்மூர் இளையதளபதி விஜய் நடிக்கும் டைப் படங்கள்தான்.
இவர் டுவிட்டரில் அனைவருடனும் உரையாடியுள்ளார் அதில் ஆந்திர காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 வைரஸுக்கு எதிரான போரை முன்னின்று நடத்துவதற்காக தெலங்கானா மற்றும் ஆந்திரா காவல்துறையினருக்குப் நான் மனதார நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களின் அயராத உழைப்பு மிகவும் அருமை.
இதுபோன்ற சவாலான நேரங்களில் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டுக்கும் மக்களுக்கும் நீங்கள் செய்யும் தன்னலமற்ற உங்கள் அர்ப்பணிப்புக்குத் தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.