இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் சினிமாவில் புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். அதற்கு முன் இயக்குனர் விக்ரமன், நடிகரும் இயக்குனருமான ராமராஜன் உள்ளிட்டவர்களிடம் கே.எஸ் ரவிக்குமார் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். ஒரு சில படங்களை நடித்து இயக்கிய இயக்குனர் கம் நடிகர் அலெக்ஸ் பாண்டியனிடமும் கே.எஸ் ரவிக்குமார் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
பொதுவாக கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கும் படத்தில் குறும்புத்தனமுள்ள வழிப்போக்கனாக ஏதாவது ஒரு காட்சியில் நடித்து விடுவார்.ஒரு காட்சியில் மட்டுமே நடிப்பார் அது ஏதாவது படத்தின் முக்கிய காட்சியாக இருக்கும். முத்து படத்தில் கூட கேரளாக்காரராக ரஜினிகாந்த் ,மீனா வரும் காமெடி காட்சியில் நடித்திருப்பார்.
இப்படியான கே.எஸ் ரவிக்குமார் இது ஒரு காட்சியில் தோன்றி முதன் முதலில் குறும்புத்தனம் செய்தது இவர் உதவி இயக்குனராக இருந்த ஆண்களை நம்பாதே படத்தில்தான்.
அந்த படத்தில் ப்ராடு வேலை செய்யும் அலெக்ஸையே கே.எஸ் ரவிக்குமார் தில்லாலங்கடியாக ஏமாற்றும் ஒரு காட்சியில் அவர் வருவார். டெலிபோனில் ஒரு ரூபாயை காய்னை உள்ளே விட்டு டச் ஆகி ஃபோன் போன பிறகு நூலில் கட்டிய ஒரு ரூபாய் காயினை எடுத்து விடும் காட்சி அதில்தான் குறும்புத்தனமாக கே.எஸ் ரவிக்குமாரும் வருவார்.
இது போல குறும்பான ஒரு காட்சியிலாவது கே.எஸ் ரவிக்குமார் தான் இயக்கும் படங்களில் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
நடிகர் சந்தானம் கூட அவர் ஆரம்பத்தில் நடித்து வந்த லொள்ளு சபாவில் கே.எஸ் ரவிக்குமார் ஒரே ஒரு வேடத்திற்காக வருவதை போகிற போக்கில் கலாய்த்து செல்வார்.