விஜய் மற்றும் விஜய் படங்களை வாழ்த்திய கலைப்புலி தாணு

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அந்தக்கால படங்களில் இருந்து அனைத்து படங்களையும் பிரமாண்டமாக தயாரிப்பவர். இவர் கடந்த 2005ம் ஆண்டு தயாரித்த படம் சச்சின். விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் மறைந்த மகேந்திரனின்…

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அந்தக்கால படங்களில் இருந்து அனைத்து படங்களையும் பிரமாண்டமாக தயாரிப்பவர். இவர் கடந்த 2005ம் ஆண்டு தயாரித்த படம் சச்சின்.

c9b8c719a804f4556b2d6baf0ce5190b-1

விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை பிரபல இயக்குனர் மறைந்த மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். அவ்வருடம் தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் இப்போட்டியில் கலந்து கொண்டதால் பெரிய வெற்றியை இப்படம் பெற முடியவில்லை.

அதே போல் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த படம் தெறி, விஜய் நடிபில் அட்லி இயக்கத்தில் வந்த இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது வசூலை வாரிகுவித்தது.

இந்த இரண்டு படங்களையும் தயாரித்து தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்றே வெளியிட்டுள்ளார் கலைப்புலி தாணு.

தம்பி விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த சச்சின், தெறி ஆகிய திரைப்படங்கள் இன்றும் மக்களால் கொண்டாடப்படுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன