கொரோனா பீதியாலும் லாக் டவுனாலும் இல்லாத பல மக்களுக்கு உணவுக்கே கையேந்தும் நிலைமை உள்ளது. இதை கருத்தில் கொண்டு பல தன்னார்வலர்கள் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர் தன்னுடைய மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் பல இடங்களில் இவரது தொண்டர்களால் நிவாரணபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நிவாரணம் கொடுக்கப்படும் பைகளில் கமலின் படம் இடம்பெறுவதால் விமர்சனத்துக்குள்ளாகிறது.
இதனால் கமல்ஹாசன் நிவாரணபொருட்கள் வழங்கும்போது தன் படம் வரவேண்டாம் என கூறியுள்ளார் கமல்.
விளம்பரப்படுத்தும் நோக்கில் ஊடகங்களை அழைத்து சென்று விளம்பரப்படுத்துவதையோ, உணவுபொருட்களின் மேல் சின்னத்தை இடுவதையோ மக்கள் நீதிமய்யம் செய்யாது என கமல் கூறியுள்ளார்.