பேட்ட படத்தில் நடித்து புகழ்பெற்றவர் மாளவிகா மோகனன்.மலபார் தேசமான கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் வர இருக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். அப்படத்தின் நாயகியாக இவர் நடித்துள்ளார்.பொதுவாக கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை லோகேஷ் கனகராஜ் கொடுக்க மாட்டார்.மாஸ்டரில் எப்படி என்று படம் வந்தால்தான் தெரியும்.
மாளவிகா மோகனன் நேற்று தமிழ்புத்தாண்டு தினமாகும் கேரளாவில் புகழ்பெற்ற விஷு கனி புத்தாண்டாகும். இதையொட்டி கூறியுள்ள வாழ்த்து செய்தியில்
என் குடும்பத்திற்காக ஒரு பிரார்த்தனை, உங்களுக்காக ஒரு பிரார்த்தனை, உலகத்திற்காக ஒரு பிரார்த்தனை. என்னிடம் உள்ள எல்லாவற்றிற்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிக்க ஒரு கணம் எடுத்துக் கொள்ளுங்கள்..என் பெற்றோரின் உடல்நலம், என் மேஜையில் உள்ள உணவு மற்றும் என் தலைக்கு மேல் கூரை. அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.