ஊர் பத்தி எரியும்போது அஜீத், விஜய் ரசிகர்களின் சைக்கோ சண்டைகள் தேவையா

அஜீத், விஜய் ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறி போய் வருகின்றனர். இவர்களை அஜீத்தோ, விஜய்யோ கண்டிக்காவிட்டால் பெரிய ஆபத்தை நோக்கி சமூகம் செல்லும் நிலை உருவாகும். ரோட்ல திரியுற ஆதரவற்றவர்கள்ல இருந்து, கூலி வேலை…

அஜீத், விஜய் ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறி போய் வருகின்றனர். இவர்களை அஜீத்தோ, விஜய்யோ கண்டிக்காவிட்டால் பெரிய ஆபத்தை நோக்கி சமூகம் செல்லும் நிலை உருவாகும்.

6c82d3264ce95d8c43bc5cdb7dfeec16

ரோட்ல திரியுற ஆதரவற்றவர்கள்ல இருந்து, கூலி வேலை பார்க்கிறவன், வியாபாரிகள் என பலரும் மிக மோசமான சூழலில் இருந்து வரும் இந்த நேரத்தில் அடுத்த வேளை கஞ்சிக்கே பலரும் அல்லாடும் சூழ்நிலை இருக்கும் இந்த துயரமான இந்த நேரத்தில் தேவையில்லாமல் மோதலை வளர்க்கிறேன் என தவறான கருத்துக்களை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

உதாரணமாக மே 1ம் தேதி அஜீத் பிறந்த நாள் வருகிறது அதை அஜீத் ரசிகர்கள் கொண்டாடுவர் இதை விஜய் ரசிகர்கள் தவறான முறையில் #மே1அஜித்குபாடைகட்டு என்று அஜீத்தை ட்ரோல் செய்துள்ளனர்.

பதிலுக்கு விஜய் ரசிகர்கள் #June22VijayDeathDay என ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

கொரோனாவின் கோரப்பிடியில் உலகமே சிக்கி இந்த வாழ்வு நமக்கு நிலைக்குமா என்னடா வாழ்க்கை என பலரும் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா இத்தாலி போன்ற நாடுகள் கலங்கி நிற்கின்றன. உலகமே பெரும் துயரை சந்தித்து வரும் இந்த வேளையில் இது போல அநாகரீக செயல்களை அஜீத், விஜய் ரசிகர்கள் நிறுத்துவது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

இதற்கு இரு நடிகர்களின் தலைவர்களான அஜீத்தும், விஜய்யும் தான் ரசிகர்களை கண்டிக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன