சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் , நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார். இவர் மதுரைக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

தெரியாத விசயம் என்னவென்றால் இவர் நேற்று மதுரையில் கொரோனா விழிப்புணர்வுக்காக, வாகனத்தில் செல்வோரிடம் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரையில் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் காவலர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
“நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார்.



வாகனங்களில் செல்வோரிடம் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
