மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ், துப்புறவு தொழிலாளிகள் பலரும் கொரோனா பணிக்காக இரவு பகல் போராடி வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் விதமாக கமல், ஜிப்ரான், யுவன், அனிருத், ஸ்ருதிஹாசன், தேவிஸ்ரீ பிரசாத், சங்கர் மகாதேவன் என பலரும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.
மேலும் சித்தார்த், சித் ஸ்ரீராம் என பலரும் இப்பாடலை இணைந்து பாடியுள்ளனர். இசையமைத்து இந்த பாடலை எழுதி இருப்பவர் ஜிப்ரான். இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது.