கடந்த வாரம் ஜே எஃப் டபிள்யூ விருது வழங்கும் விழாவில் பேசிய ஜோதிகா , தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தேன் முழுவதும் சுற்றிபார்க்கவில்லை. ஜெய்ப்பூர் பேலஸ் போல அழகாக பராமரிக்கப்பட்டிருந்தது. பிறகு ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றேன் அதன் நிலை மிகவும் மோசமாக இருந்தது,
கோவில்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் ஆஸ்பத்திரி, ஸ்கூல் போன்றவைகளுக்கும் கொடுக்கலாம்.
ஜெய்ப்பூர் பேலஸ், இது போல கோவில்களை அதிகம் பெயிண்ட் அடித்து செலவு செய்து பராமரிப்பதற்கு பதிலாக இது போல ஆஸ்பத்திரி, பள்ளி என மற்றவைகளுக்கு செலவிடலாம் கோவிலை பிறகு சென்று பார்க்கலாம் என நினைத்த நான் பிறகு அங்கு செல்லவில்லை என கூறி இருந்தார்.
இதற்கு பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராஜராஜன் எவ்வளவு பெரிய அரசர் அவர் கட்டிய அரண்மனையை பராமரித்து வருவதை குற்றம் சொல்வதா? அப்படி என்றால் நீங்க ஏன் சினிமால நடிக்கிறிங்க, தயாரிக்கிறிங்க அந்த காசை வைத்து ஆஸ்பத்திரி, ஸ்கூலா கட்டலாமே என கூறி இருக்கின்றனர்.
மேலும் ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மருத்துவமனை கட்ட சொன்னது ஓக்கே அதற்காக அவர் சொன்ன உதாரணம் தவறானது.
தமிழர் வாழ்வியலை, கட்டிடக்கலையை தவறான முறையில் பேசிய ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.