தீப்பெட்டி கணேசன், இவர் பல படம் நடித்து கிடைக்க வேண்டிய பெயரை ஒரு படத்திலேயே நடித்து அந்த பெயரை பெற்று விட்டார். குள்ளமான தோற்றம் கொண்டவர்கள் எல்லோரையும் காமெடி நடிகர்களாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா பயன்படுத்தி இருக்கிறது. இவரை மட்டும்தான் கொடூரமாக மறைந்திருந்து தாக்கி கொள்ளும் கொடூர கூலிப்படை நபராக இவர் நடித்த ரேணிகுண்டா படத்தில் சித்தரித்து இருந்தது.
அசல் மதுரைக்காரர் ஆன இவர் பெயர் கார்த்தி, தீப்பெட்டி கணேசன் என அழைக்கப்படுகிறார். அஜீத்துடன் பில்லா 2விலும் இவர் நடித்துள்ளார்.
சில வருடங்கள் முன் சினிமா ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது கடுமையான முட்கள் இருந்த இடத்தில் இவர் நடந்து சென்றிருக்கிறார். அப்போது காலில் குத்திய முள் செப்டிக் ஆகிவிட்டது. அதனால் சினிமா நடிகரும் மதுரை திமுக கட்சியை சேர்ந்தவருமான டாக்டர் அகிலனால் அவர் மருத்துவமனையில் வைத்து இவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
இப்போது நடிக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறாரம் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட காசில்லாத சூழ்நிலையில் இருக்கிறாராம். தல அஜீத் பார்த்தால் கண்டிப்பாக உதவுவார் அவரிடம் இந்த செய்தி போய் சேரவில்லை யாராவது அஜீத் சார்கிட்ட சொல்லுங்க என கூறியுள்ளார் தீப்பெட்டி கணேசன்.
இந்த நிலையில் இவருக்கு பாடலாசிரியர் சினேகன் தன்னாலான உதவியை செய்துள்ளார்.