டுவிட்டரில் காலம் கடந்தும் இன்னும் ரஜினி, கமல் ரசிகர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இந்த சண்டைகளில் பெரும்பாலும் நாகரீகமான வார்த்தைகள் புழக்கத்திலேயே இருக்காது.
உச்சத்தை தொட்ட இரண்டு நடிகர்களும், நல்ல மெச்சூரிட்டி லெவலுக்கு வந்து ஒரு 50 வயதை கடந்து ஒரு மகளை திருமணம் முடித்து வைக்க வேண்டிய வயதில் இருக்கும் ரசிகர்கள் கூட டுவிட்டரில் கமல், ரஜினி சண்டையை இன்னும் தொடர்ந்து வருகின்றனர்.
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது போக அந்த நடிகர்களை தாக்கியது போக இப்போது அந்த நடிகர்களின் வாரிசுகளை வைத்து வம்பிழுக்க வைத்துள்ளனர்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா ஆடிய பரதம் காமெடியாக பார்க்கப்பட்டு இணையத்தில், சமூக வலைதளங்களில் வைரலானது. அது போல ஸ்ருதி பாடிய தென்பாண்டி சீமையிலே பாடலும் காமெடியாக பார்க்கப்பட்டு வைரலானது.
இப்போது இந்த இரண்டு விசயத்தையும் கேலிசெய்து ரசிகர்கள் காமெடி செய்து ஒருவருக்கொருவர் மாறி மாறி சண்டை இட்டு வருகின்றனர்.