கைலாஷா நாட்டில் ஊரடங்கு இல்லை என்ற வகையில் பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாம். இதனால் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்நித்யானந்தா ஆஸ்ரமத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பேஜான கைலாஷா தெ அவதார் க்ளிக்ஸ் தமிழில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சைவத்தை வேளாண்மை செய்கின்ற சமூகம் நாங்கள்
நியூஸ் 18 – தொலைக்காட்சிக்கு..
நித்யானந்தா பெண் சன்யாச சீடர்களின் பதில்..
1. கைலாசாவிற்கு ‘லாக்டவுன்’ கிடையாது என்பது பொய். அது தவறான புரிதலை மக்களுக்கு அளிக்கும்.. நாங்கள் வாழும் நாட்டின் விதிகளை மதித்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றி ஆசிரமத்திற்குள்தான் வாழ்கிறோம்..
2. நீங்கள் வெளியிட்ட எங்கள் குருநாதரின் தரிசன வீடியோவிற்கு மிக்க நன்றி.. சிலஆயிரம் பேர் மட்டுமே கண்ட தரிசனத்தை, உங்கள் தொலைக்காட்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்டியமைக்கு நன்றி!! (நீ தப்பான எண்ணத்தோட போட்டாலும், நீ காட்டியது கடவுளின் அவதாரத்தை என்பதால், பார்த்த மக்களுக்கு முக்தியே கிட்டும்)
3. நீங்கள் வெளியிட்ட எங்களின் (பெண் சன்யாசிகளின்) டிக்டாக் வீடியோ என்பது, பொய்.. அவை முகப்புத்தகம் மற்றும் யூ-டியூப் வீடியோக்கள்.. மேலும் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.. இப்பொழுது கொரொனா சூழ்நிலையில் அல்ல.
4. ஆனால் ஏன் உங்களுக்கு இவ்வளவு சிரமம் என்று தெரியவில்லை!! மிகவும் கடினப்பட்டு எங்களின் பழைய வீடியோக்களை போட்டு மக்களை ஏமாற்றுகிறீர்கள்..
5. உண்மையில் நாங்கள் இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரிந்தகொள்ள ஆவலாக இருந்தால் Adhi Kailaasa என்ற எங்களின் முகப்புத்தகத்தை பின்பற்றலாம். தினமும் நடக்கும் சேவைகள் போட்டோ மற்றும் live விடியோக்கள் உள்ளது..
6. சன்யாசிகள் அனைவரும் தினமும் 8 மணிநேரம் நிலத்தில் வேலை செய்து, உழைத்து, இயற்கை விவசாயம் செய்து அன்னதானம் அளிக்க பாடுபடுகின்றோம்.. துணிவிருந்தால் அதை காட்டுங்கள் உலகிற்கு!!!! அதைவிட்டுவிட்டு.. மக்களை ஏமாற்றாதே!!
7. மேலும் மேலும் சாதுக்களை இழிவுபடுத்தி அழிவைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள்!!
8. நீங்கள் திருந்தி மனிதர்களாக வாழவேண்டும் என்பது எங்களின் ஆழ்ந்த பிரார்த்தனை!!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
