தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி மூலம், அறிமுகமாகி பாணா காத்தாடி , தெறி, தங்க மகன் என பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இஅவர் சில வருடங்கள் முன் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இன்று நடிகை சமந்தாவின் பிறந்த நாள், இதையொட்டி இவரின் கணவர் நாகசைதன்யாவே இவருக்கு கேக்கை தயார் செய்திருக்கிறார்.
மேலும் கேக்கை வெட்டுவதற்கு முன் சமந்தா பிரேயர் செய்துள்ளார். நான் எதற்காக பிரேயர் செய்கிறேன் என்றால் குடும்பம்தான் என டுவிட் செய்துள்ளார்.
இன்று பிறந்த நாளையொட்டி சமந்தாவுக்கு திரையுலக பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.