1988 முதல் ஹிந்தி திரையுலகில் கலக்கி வருபவர் இர்பான்கான். பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஹிந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர்.
சில வருடங்களுக்கு முன் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட இவர் வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொண்டார்.
சில நாட்களுக்கு முன் தான் இவரின் தாயார் மரணம் அடைந்தார் .இந்த நிலையில் இர்பானின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இன்று உடல் நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இர்ஃபான் இன்று மரணமடைந்தார்.
அவரின் மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.