பிரபல ஹிந்தி நடிகர் ரிஷிகபூர் மரணம்

ஹிந்தி சினிமா நடிகரான பிரபல நடிகர் இர்ஃபான் கான் நேற்றைய தினம் மரணமடைந்தார். அந்த சோகத்தில் இருந்தே இந்தி சினிமா உலகம் இதுவரை மீளவில்லை. இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரான ரிஷிகபூரும் இன்று…

ஹிந்தி சினிமா நடிகரான பிரபல நடிகர் இர்ஃபான் கான் நேற்றைய தினம் மரணமடைந்தார். அந்த சோகத்தில் இருந்தே இந்தி சினிமா உலகம் இதுவரை மீளவில்லை.

70750d0c97c9d30f21dcecdc7fc6dd54

இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரான ரிஷிகபூரும் இன்று மரணமடைந்தார். ரூப்பு கெரா மஸ்தானா என்ற பாடல் மூலம் ஹிந்தி மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்த நடிகராக இவர் ஆனார்.

1973ல் வெளிவந்த பாபி என்ற திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. ஹிந்தியில் முன்னணி நாயகனாக திகழ்ந்த இவருக்கு புற்றுநோய் இருந்த காரணத்தால் சில வருடம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இந்நிலையில் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள  எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பிப்ரவரி மாதம், ரிஷி கபூர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரிஷி கபூர்  ஏப்ரல் 2 முதல் தனது டுவிட்டர் கணக்கில் எதையும் வெளியிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலையில் ரிஷிகபூர் மரணமடைந்தார் அவருக்கு வயது 68. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன