விஜய் டிவி தொகுப்பாளினியாக அறியப்படுபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக விஜய் டிவி தொகுப்பாளினியாக அறியப்பட்ட இவர் திருமணத்துக்கு பின் விஜய் டிவியை விட்டு விலகினார். இருப்பினும் ஆஸ்தான தொகுப்பாளினியாதலால் அவ்வப்போது வந்து விஜய் டிவியில் முகம் காட்டி விட்டு செல்வார்.
சில நாட்களாக இவரை சமூக வலைதள பக்கம் காணவில்லை. அதுவும் எல்லோரும் வீட்டில் இருக்கும் இந்த காலத்திலேயே இவரை பார்க்க முடியாத நிலையில், தனக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதுவரை இது குறித்து தான் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் ரசிகர்கள் கோபம் கொள்வார்கள் என்பது தெரியும் என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.