ஹாலிவிட்டில் வர இருக்கும் திரைப்படம் நோ டைம் டு டை’. இப்பட ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் வெர்சனில் 25வது படமாக இப்படம் வர இருக்கிறது. சமீப காலமாக கொரோனா தொற்றால் உலகமே பாதிப்படைந்துள்ள நிலையில் பலரும் பலவிதமாக நிவாரண நிதி திரட்டி அரசுக்கும், தனி மனிதர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கிளாப் போர்டை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க நோ டைம் டூ டை படக்குழு முடிவு செய்துள்ளனர்.
கிளாப் போர்டில் ‘நோ டைம் டு டை’ படத்தில் பணிபுரிந்த நவோமி ஹாரிஸ், லியா சீயூடாக்ஸ், லஸானா லின்ச், படத்தின் இயக்குநர் கேரி ஃபோஜி, தீம் பாடலைப் பாடிய பில்லி எல்லீஷ் உள்ளிட்டோரின் கையெழுத்து இடம்பெறும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கிளாப் போர்ட் ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை பிரிட்டன் சுகாதாரத்துறைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.