இந்த கொரோனா ஹாலிடேஸில் அனைத்து டிவிக்களும் அரைத்த மாவையே அரைக்கின்றன. எவ்வளவோ நல்ல படங்கள் யூ டியூபில் கிடைத்தாலும் பலருக்கு தேடி பார்க்க தெரிவதில்லை.
பலரும் அவரவர் ஸ்வீட் மெமரீஸ் காலங்களை கடந்து வந்தாலும் அந்த கால கட்டத்தில் பார்த்து ரசித்த பல நல்ல படங்களை காலப்போக்கில் மறந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் மட்டுமே ஞாபகம் வைத்து தேடி தேடி பார்க்கின்றனர். எவ்வளவோ படங்கள் யூ டியூப்பில் கிடைக்கின்றன. ஆனால் அதை தேடி தேடி பார்க்க பலருக்கு தெரிவதில்லை. பார்த்த படங்களையே பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.
ஹாரர் படம் பார்க்க பலரும் விரும்புவர் தங்களுக்கு தெரிந்த படங்களை எல்லாம் பார்த்திருப்பர். இன்னும் புதிய ஹாரர் மூவிகளை எல்லாம் தேடி வருவர் அவர்களுக்காக தினம் ஒரு வித்தியாசமான படம் பற்றிய தகவல் கொடுத்து அந்த படத்தை பார்க்க வைக்கவே இந்த பதிவு.
கேரளாவில் மரபுவழியாக காலம் காலமாக சொல்லப்படும் அரச குடும்பத்து கதையில் கொஞ்சம் சேர்த்து சிறிது கற்பனையும் கலந்து இயக்கப்பட்ட படம் கள்ளியங்காட்டு நீலி. நீலீ என்றால் கொடூரமான பெண் பேய் என சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெண் பேயின் கதைதான் இந்த கள்ளியங்காட்டு நீலி திரைப்படம்.
kalliyankattu neeli என்று ஆங்கிலத்தில் டைப் செய்து பார்த்தால் யூ டியூபில் இப்படம் பார்க்கலாம் ஜெயபாரதி {முத்து படத்தில் ரஜினி , சரத்பாபு அம்மாவாக இருப்பாரே} அவர் நடித்த படம்.
திகிலில் உறைய வைக்கும் அமானுஷ்ய படமிது ஹாரர் பட விரும்பிகள் பார்க்கலாம்.