பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம்,தேசிய கீதம், ஆட்டோ கிராஃப், பாண்டவர் பூமி,தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் சேரன்.
இவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் அதனால், இன்று இயக்குனர் தினமாதலால் தனது குரு கே.எஸ் ரவிக்குமாரை புகழ்ந்து ஒரு டுவிட் இட்டுள்ளார். இதுதான் அது.
இயக்குனர்கள் தினமான இன்று என் குருநாதரை நினைத்து பார்க்கிறேன்..உங்களின் உழைப்பின் மூலமே இயக்குனர் என்ற வேலை எவ்வளவு கடினம் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்தேன். என் தலைதாழ்ந்த வணக்கம் என் உயிர் படைப்பாளிக்கு.. மரியாதைக்குரிய இயக்குனர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.