பல நடிகர் நடிகைகள் இந்த குவாரண்டைன் பீரியடில்தான் சமைக்கவே கற்று கொண்டிருக்கின்றனர் போலும். பலரும் தான் தயாரித்த உணவு வகைகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
நடிகை காஜல் அகர்வாலும் தான் ஷூட்டிங் ஸ்பாட்டை மிஸ் செய்வதாகவும் அதனால் வீட்டில் இரவு ஆந்திர உணவு வகைகளை தயாரிக்கலாம் என சில உணவு வகைகளை தயாரித்திருக்கிறார்.
அவரின் முதல் முயற்சியாக ஆந்திர உணவான வெண்டக்காய் புலுசு[ புலுசு என்றால் குழம்பு} சொரக்காய் பச்சடி, பெசரட்டு செய்து அசத்தி தனது சமூக வலைதள கணக்குகளில் வெளியிட்டுள்ளார்.