கொரோனா கோர தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க கடும் எதிர்ப்பு நிலவியது. நாற்பது நாட்கள் நாங்கள் எல்லாம் தனிமையில் வீட்டில் இருந்தோம். இப்போது இப்படியாகி விட்டதே என மக்கள் புலம்பினர்.
டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கு அடித்து பிடித்து பலரும் சமூக இடைவெளி இல்லாமல் நின்றதும், பல இடங்களில் காவலர்கள் கொரோனா கட்டுப்படுத்தல் பணியை விட்டு மதுக்கடைகளில் கூட்டம் கூடுபவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல இல்லத்தரசிகள் வேதனையில் புலம்பினர். பலரும் இருக்கிற கஷ்டத்தில் இந்த மதுக்கடை திறப்பு தேவையா என கண்ணீர் வடித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் டாஸ்மாக் திறக்க கூடாது என உத்தரவிட்டனர். மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து விட்டு முதல் முறையாக அவர்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
கமலஹாசனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.