கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் பொருட்டு கடந்த மார்ச் 23ல் சோதனை முயற்சியாக ஊரடங்கு நடத்தப்பட்டது. பிறகு 24ல் மட்டும் சாதாரண நாளாக தொடர்ந்தது அன்று மதியமே மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க மாநில அரசுகள் மதியம் 3 மணிக்கெல்லாம் கடையை அடைக்க உத்தரவிட்டன.
அதற்கு அடுத்த நாளான மார்ச் 25ல் இருந்து கடுமையான ஊரடங்கு ஏப்ரல் 14 வரை பிறப்பிக்கப்பட்டது. அந்த 21 நாளில் கொரோனா வைரஸ் மற்ற நாடுகள் அளவுக்கு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பெரிய விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக மே 3 வரை ஊரடங்கை தள்ளி வைத்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் பாதிப்பு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் எகிறி அடிக்கவே வரும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் இல்லை. பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட மாவட்டங்கள் எல்லாம் குறைந்து கொண்டு வருகின்றன. தினமும் சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன.
15ம் தேதி முதல் சிறிய அளவில் ரயில் போக்குவரத்தும் தொடங்கப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடும் டீக்கடை, ஹோட்டல்கள் போன்றவை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் ஓரளவு சகஜ வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.