பூனம் பாண்டே இவரை தெரியாத வட இந்தியர்கள் குறைவு. தென்னிந்தியர்களுக்கும் இவரை தெரியும் பரபரப்புக்கு சொந்தக்காரர். ஏதாவது பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர செய்வார். இவர் பிரபல மாடலிங் ஆவார். நிர்வாணமாக ஓடப்போகிறேன் என்றெல்லாம் பேசி மக்களை மிரள வைத்தவர் இவர்.
இவர் நேற்று மாலையில் தனது நண்பரான அஹ்மத் என்பவருடன் சேர்ந்து உயர்தர சொகுசு காரில் சுற்றி திரிந்ததால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மஹராஷ்டிராவே கொரோனா வைரஸ் பாதிப்பால் அஞ்சி நடுங்கி வரும் இவ்வேளையில் லாக் டவுனை மதிக்காமல் மரைன் டிரைவிங் என்ற பெயரில் இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கூத்தடித்ததால்
இந்திய தண்டனைச் சட்டத்தின் 269 (உயிருக்கு ஆபத்தான ஒரு நோயின் தொற்றுநோயைப் பரப்புவதற்கான கவனக்குறைவான செயல்) மற்றும் 188 (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட ஒழுங்கின் கீழ்ப்படியாமை) பிரிவுகளின் கீழ் பாண்டே மற்றும் அஹ்மத் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வட இந்தியா முழுவதும் பூனம் பாண்டே ட்ரெண்டிங்கில் உள்ளார்.