நடிகர் கமல் நடிப்பில் சூரப்புலி என்பது பலருக்கு தெரியும். ஆரம்ப காலத்திலேயே வித்தியாசமான படங்களில் நடிக்க துவங்கியவர். பின்னாளில் வித்தியாசமான படங்களே அவரது அடையாளமாகி போனது.சீக்கிரமே 100வது படத்தில் நடித்த கமல் அதில் பார்வையற்றவராக நடித்து இருந்தார். அந்த நேரங்களிலேயே மூன்றாம் பிறை உள்ளிட்ட வித்தியாசமான படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

கடந்த 1987ம் ஆண்டு கமலின் நடிப்பு திறமையை பாராட்டி மொரீஷியஸ் அரசு கமலின் சுவாதி முத்யம்,சிகப்பு ரோஜாக்கள், சத்மா{மூன்றாம் பிறை} ,புன்னகை மன்னன் உள்ளிட்ட படங்களை அந்த நாட்டு அரசு சார்பில் கமல்ஹாசன் படவிழா நடத்தி அரசு சார்பில் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
இது கமலுக்கு கிடைத்த பெருமையாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் குறிப்பிடுகிறார்.