பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் பேசினார்.கொரானா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை எந்த திட்டங்களும் நிவாரணங்களும் மத்திய அரசால் நேரடியாக அறிவிக்கப்படாத நிலையில் நேற்று பிரதமரின் உரையை பலரும் ஆர்வமாக பார்த்தனர்.

அவர் பேசியதாவது, இந்திய பொருட்களையே அதிகம் வாங்க சொல்லி இருக்கிறார். தற்சார்பு வாழ்க்கை வாழ்வதில் நாம் தான் சிறப்பாக செயல்படுகிறோம் எனவும், கொரோனா பிரச்சினைக்காக அது சார்ந்த விசயங்களுக்காக 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும் இதில் பொதுமக்களுக்கு நிவாரணம் எதுவும் வருமா என எதுவும் சொல்லவில்லை. இருப்பினும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் கூறியுள்ளதாவது,
உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
என கூறியுள்ளார்.
இதுவரை பிரதமர் மோடியின் கருத்தில் உடன்படாத நடிகர் கமல் முதல்முறையாக வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.