சென்னை அடையாறில் சிறப்பான முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தை செயல்படுத்தி வருபவர் டாக்டர் சாந்தா. வயதானாலும் தனது முதுமையை பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு எளிய முறையில் அதிக பண செலவின்றி சிறப்பான சிகிச்சையை கொடுத்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் இருந்து கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாறு புற்று நோய் மருத்துவமனையையே நாடுவார்கள் அந்த அளவு இந்த மருத்துவமனையின் தரமான செயல்பாடுகளை மக்கள் அறிவார்கள்.
தற்போதைய கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக ஏழை மக்களில் இருந்து பெரும்பணக்காரர் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவத்தை சேவையாக செய்து வரும் டாக்டர் சாந்தாவின் கேன்சர் இன்ஸ்டியூட்டுக்கு உதவுங்கள் என கமல் தெரிவித்துள்ளார்.