கொரோனா லாக் டவுனால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர், ரசிகைகளுடன் உரையாடி வருகின்றனர். அதில் பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயியும் உரையாடி வருகிறார்.
சின்மயி உரையாடும்போது பல ரசிகர்கள் அந்த பாடலை பாடுங்கள், இந்த பாடலை பாடுங்கள் என சொல்வதுண்டு. அப்படி சொல்பவர்களிடம் நீங்க சொல்ற பாடலை நான் பாடுகிறேன் நீங்கள் அதற்கு பதிலாக கொரோனா லாக் டவுனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கையை அன்பாக வைத்திருந்தாராம்.
அதன்படி கடந்த ஒரு மாத காலமாக வறுமை நிலையில் இருக்கும் வறியவர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை சின்மயி பதிவிடுகிறார்.
பலரும் தங்களால் இயன்ற தொகையை அவர்களது வங்கி எண்ணுக்கு அனுப்பி விட்டு அதற்குறிய ரசீதையும் பதிவிடுகின்றனாராம்.
இப்படியாக சின்மயி கஷ்டப்படும் பலருக்கு 30 லட்சம் அளவிலான உதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளாராம்.