கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உலகமே சொல்ல முடியா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வடமாநிலமான ஒடிசா, மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை அச்சுறுத்த ஆம்பன் என்ற புயல் உருவாகி உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, ஆம்பன் புயல் வருகிற 19ம்தேதி முதல் மணிக்கு 170 கிமீ முதல் 180கிமீ வேகத்தில் அதி தீவிர புயலாக உருவெடுக்கிறது என கூறப்பட்டுள்ளது.
முதலில் வடமேற்கு திசையில் உருவாகும் இந்த புயல் பின்னர் திசை மாறி வடமேற்கு திசையில் நகரும்.இந்த புயல் பின்னர் திசை மாறி வடகிழக்கு திசை வழியாக சென்று மேற்கு வங்கம் ஒடிசாவை நோக்கி திரும்பும் என கணிக்கப்பட்டுள்ளது.