கொரோனாவால் இயல்பு வாழ்க்கை முடங்கி ஊரடங்கால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களுக்கு வேலைக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் இனிமேல் யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை என கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடக்க துவங்கி விட்டனர்.
பல ஆயிரக்கணக்கான மைல்கள் கொழுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலம் தேடி செல்கின்றனர். சைக்கிள், டிரை சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் எல்லாம் தினந்தோறும் பல கீமீ செல்கின்றனர்.
இங்கே படத்தில் இருப்பது ஆந்திராவுக்கு வேலைக்காக வந்த தொழிலாளி ஒருவர் போக்குவரத்து இல்லாத காரணத்தால் துலாபாரம் போல செய்து தனது இரு குழந்தைகளையும் அதில் அமரவைத்து தனது சொந்த மாநிலமான ஆயிரக்கணக்கான மைல் உள்ள சட்டீஸ்கர் அழைத்து செல்கிறார். மிகவும் வேதனையான துயரமான நேரத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியவில்லை.