ஹிந்தியில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக இருந்த நட்டி சில வருடங்களுக்கு முன் தமிழில் பிரபலமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

இந்த நிலையில் வித்தியாச முயற்சியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கடந்த வருடம் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.
இப்படத்தை பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இப்படம் வெளிவந்து ஒருவருடங்களுக்குள் அதை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஓரிரு முறைகள் அப்படத்தை தன் டிவியில் ஒளிபரப்பி விட்டது.
நேற்றும் இப்படத்தை ஒளிபரப்பியது. இதை பார்த்த நடராஜின் நலம் விரும்பிகள் ஃபோன் செய்து அவரை பாராட்டி தள்ளி விட்டார்களாம்.
இதனால் மகிழ்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நட்டி என்ற நட்ராஜ்.
அவர் கூறி இருப்பதாவது,
நிறைய தொலைபேசி வாழ்த்துக்கள், அழைப்புகள்.. நன்றி சன் தொலைக்காட்சி, நன்றி சன் pictures.. நன்றி பாண்டியராஜ் சார்… நன்றி சிவகார்த்திகேயன் சார்… நன்றி நீரவ் ஷா…அனைத்து சக நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள்.. பாராட்டுகள் விருதுக்கு மேலானது..
