திரனோட்டம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகர் மோகன்லால். 1978ம் ஆண்டு வெளியானது இப்படம் . இவர் நடிக்க வந்து 42 வருடங்கள் ஆகிவிட்டது.
மலையாளத்தின் முன்னணி நடிகராக மட்டுமல்லாது மலையாள சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்.
லாலேட்டா என செல்லமாக அழைக்கப்படும் மோகன்லால் 60 வயதை அடைந்துள்ளார். நேற்று அவருக்கு பிறந்த நாள் மலையாள திரையுலக பிரபலங்களும் அவரின் ரசிகர்களும், தமிழ் ரசிகர்களும் கூட மோகன்லாலுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
அனைவருக்கும் தனது அன்பான நன்றிகளை மோகன்லால் தெரிவித்துள்ளார்.