தமிழில் பேட்ட படத்தில் நடித்தவர் நவாசுதீன் சித்திக். வில்லன் வேடம் ஏற்று இப்படத்தில் நடித்திருந்தார் இவர். ஹிந்தியில் இவர் முன்னணி நடிகர் ஆவார்.
சமீபத்தில் நவாசுதீன் சித்திக்கும் அவரது மனைவி ஆலியாவும் விவாகரத்து பெற்றார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆலியாவுக்கும் பத்திரிக்கையாளர் பியூஷ் பாண்டே என்பவருக்கும் பழக்கம் இருந்ததால் விவாகரத்து நடந்துள்ளதாக பாலிவுட் பத்திரிக்கைகள் பல செய்தி வெளியிட்டுள்ளது.
இதை கேட்டு கொதித்து எழுந்துள்ளார் பியூஷ் பாண்டே. நவாஸுதீன் ஆலியா விவாகரத்து அறிவிப்பைப் பற்றி ஊடகங்கள் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதில் நான் தேவையில்லாத பலிகடாவாக ஆகி இருக்கிறேன். இந்த வதந்திகள் முற்றிலும் ஆதாரமில்லாதவை ஆகும் என்னை ஏன் இதில் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நானும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என் குடும்பத்தார் இது போல செய்திகளை பார்த்து வருத்தத்தில் உள்ளனர் என கூறி உள்ளார்.