நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சதீஷ். இவர் சிவகார்த்திகேயன் மட்டுமல்லாது பல நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்திருக்கிறார்.
தமிழ்படம் பார்ட் 2வில் பல கெட் அப்கள் போட்டு இவர் நடித்திருக்கிறார். இவர் லேடிஸ் கெட் அப்பில் நடித்த ஒரு புகைப்படம் ஒன்று பிரபலம்.
இந்த புகைப்படத்தை பயன்படுத்தி சதீஷூக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை நடிகர் சூரி சொல்லி இருக்கிறார். அதுவும் வித்தியாசமாக ஹேப்பி பெர்த்டே சிஸ்டர் என சொல்லி இருக்கிறார்.
இன்று சதீஷ் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.