நடிகை பிரணீதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஒரு தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு போர்கி என்னும் கன்னடப் படத்தின்மூலம் ஹீரோயினாக தனது சினிமாப் பயணத்தினைத் துவங்கினார்.
அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் அதே ஆண்டு எம் பில்லோ எம் பில்லடோ என்ற படத்தின்மூலம் கால் பதித்தார். அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெற்றுவந்த இவருக்கு, 2011 ஆம் ஆண்டு உதயன் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
தமிழில் இவர் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் பேட்டியில் கூறியதாவது, “எனது பெற்றோர் என்னை டாக்டராக்க விரும்பினர். ஆனால் நான் சினிமாவில் நுழைய வேண்டும் என்றே எண்ணி இருந்தேன். துவக்கத்தில் சினிமாவுக்கு நோ சொன்ன அவர்கள் அதன்பின்னர் எனது ஆசைக்காக ஓகே சொல்லிவிட்டனர்.
நடிகையானதால் நான் மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்கிறேன். எனக்கு சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் சரித்திர காலத்து ஆடை அணிகலன்கள் அணிந்து நடிக்க ஆசை” என்று கூறியுள்ளார்.
ஊரடங்கினால் தவிக்கும் மக்களுக்கு, வளர்ந்துவரும் நடிகையான பிரணீதா ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.