இயக்குனர் முரளி அப்பாஸ், அஜீத் நடித்த ராசி பட இயக்குனர் இவர். தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் செய்தி தொடர்பாளராக உள்ளார்.
ஜீன்ஸ் படத்தில் முதலில் கவுண்டமணி நடிப்பதாக இருந்து பின்பு நடிக்க முடியாமல் போய்விட்டதாம். நாசர் நடிக்க வேண்டிய ரோல் கவுண்டமணி நடிக்க வேண்டிய ரோலாம்.
ஏன் சார் நடிக்கல என ஒருமுறை இயக்குனர் முரளி அப்பாஸ் கவுண்டமணியிடம் கேட்டபோது, அதற்கு கவுண்டமணி சொன்ன பதில்
ஆமா சார்.. ஆனா சங்கரு தொண்ணூறு நாள் கால்சீட் மொத்தமா கேட்டாரு. அதுவும் அமெரிக்காவுல.
இடையில யாருக்கும் டேட் கொடுக்க முடியாது. அதனால அந்த படத்தை மறுத்துட்டேன்.
என்று கூறி, பிறகு ஒரு வார்த்தை சொன்னார் அதுதான் சிறப்பு.
” அந்த தொண்ணூறு நாள இங்கே
சில சின்ன கம்பெனிகளுக்கு பிரித்துக்கொடுத்தா அவங்க பொழைச்சுக்குவாங்கல்ல “என கவுண்டமணி கூறியுள்ளார்.
வெயிட்டான ரோல் இருந்தாலும் கவுண்டமணியின் இந்த பதில் உண்மையிலேயே நல்ல மனித நேயம் மிக்க மனிதர் கவுண்டமணி என கூற வைக்கிறது.
நேற்று கவுண்டமணியின் பிறந்த நாள் என்பதால் கவுண்டமணியை பற்றிய பதிவுகள் சமூக வலைதளங்களில் தூள் பறக்கிறது.