கடந்த ஆண்டு சீனாவில் உள்ள ஊகானில் பரவிய கொரோனா வைரஸ் வடிவேலு சொல்வது போல் உலகையே அந்தலை சிந்தலை ஆக்கி விட்டது.
அதிலும் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி என்று ஒரு பேச்சு இருந்த நிலையில் அதைவிட அதிகமாக அமெரிக்கா பாதிக்கப்பட்டிருக்கிறது. லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலி லட்சத்திற்கும் அதிகமாக தொற்று என அமெரிக்காவையே உலுக்கிவிட்டது கொரோனா.
மிகப்பெரிய நாடான அமெரிக்காவில் இது சமாளிக்க முடியாத நிகழ்வாக இருந்தது.
இந்த நிலையில் கொரோனா ஆரம்பித்த மார்ச் மாத காலக்கட்டத்தில் 497 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையிலேயே பலி எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கட்டுப்படுத்த முடியாமல் போனது. 2000க்கும் அதிகமானோர் பலியாகினர்.
இப்போது சிறிய இடைவேளைக்கு பின் 400 என்ற ரேஞ்சில் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதனால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.