காட்மேன் என்ற படத்தை பிரபல தனியார் நிறுவனமான ஜீ 5 நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இப்படத்தில் ஹிந்து துறவிகளை ஹிந்து மதத்தை மிகவும் மட்டமான முறையில் சித்தரித்திரித்திருப்பதாக பல ஹிந்து அமைப்புகள் இப்படத்தை தடை செய்ய கோரி கோரிக்கை வைத்துள்ளன.
படத்தின் டிரெய்லரிலேயே ஒரு துறவி மங்களகரமான குத்து விளக்கில் சிகரெட் பற்ற வைப்பதாக காட்சி ஒன்று உள்ளது. இதுபோல அபத்தமான பல காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா பிரமுகர் அஸ்வத்தாமன், மற்றும் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றோர் இப்படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.