சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளியாகி இருக்கும் பொன்மகள் வந்தாள். விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் எதிர்ப்பையும் மீறீ அமேசான் பிரைமில் இன்று வெளியாகியது.
இதுபோல படம் தியேட்டரில் வெளிவருவதற்கு முன்பே அமேசான் உள்ளிட்ட தளங்களில் வெளியாவது இதுவே முதல் முறை..
இந்த படம் எப்படி உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளது.
குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை அடிப்படையாக கொண்ட கதை இது. குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு பலியாகும் காட்சிகள் கண்களை குளமாக்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைக்கொலை என பரபரப்பாக ஆரம்பிக்கும் படம் லேசான வேகத்தோடு நகர்ந்து ப்ளாஷ்பேக் வரும்போது படம் சூடுபிடிக்கிறது.
ஜோதிகா அதிரடியான வக்கீலாகவும் மேலும் தியாகராஜன், பிரதாப்போத்தன், பாண்டியராஜன், பார்த்திபன், பாக்யராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள்.
தன் தாய்க்கு நேர்ந்த அநீதிக்கு ஜோதிகா நீதிதேவனிடம் முறையிடுவது, பொள்ளாச்சி சம்பவங்கள் போன்றவற்றை ஆங்காங்கே கண்டித்திருப்பது என படம் சபாஷ் போடவைப்பதாக ரசிகர்கள் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
படம் இன்னொரு முறை பார்க்கும் ரகமாம்.