தினத்தந்தி சினிமா விளம்பரத்தை பாராட்டிய பார்த்திபன்

கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சினையால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா துறைகளும் முடங்கி போய் உள்ளன. தமிழ் நாளிதழ்களில் தினத்தந்தியை காலையில் வாங்கியவுடன் முதலில் பார்ப்பது அதன்…

கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் லாக் டவுன் பிரச்சினையால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எல்லா துறைகளும் முடங்கி போய் உள்ளன.

2b6d89ca8fa4801880fa39baeb2eb04e

தமிழ் நாளிதழ்களில் தினத்தந்தியை காலையில் வாங்கியவுடன் முதலில் பார்ப்பது அதன் கலர்ஃபுல்லான திரைப்பட விளம்பரங்களைத்தான்.

இது அந்தக்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் விசயமாகும்.

ஆனால் முதல் முறையாக இந்த லாக் டவுன் பிரச்சினையாலும் சினிமாத்துறையே செயல்படாததாலும் சினிமா சம்பந்தமான கலர்ஃபுல் விளம்பரங்கள் எதுவுமே வராமல் இருந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அமேசான் ப்ரைமில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட நாள் கழித்து தினத்தந்தியில் முழுப்பக்கத்தில் கலர்ஃபுல்லாக இப்படம் இன்று முதல் என்று விளம்பரம் வெளியாகியுள்ளது.

இதை பார்த்த நடிகர் பார்த்திபன் நீண்ட நாளாகிவிட்டது முழு பக்க விளம்பரம்!!! ——— வென்றாள்!சாட்சியங்கள் சொல்கிறார்கள். தீர்ப்புச் சொல்லுங்கள்!என குறிப்பிட்டுள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன