சந்தானம் தற்போது டிக்கிலோனா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கார்த்திக் ஜெய் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.
இப்படத்திற்காக அடுத்தடுத்து மூன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. நேற்று முன் தினம் மாலை செகண்ட் லுக் போஸ்டர் டிக்கிலோனா படத்துக்காக வெளியிடப்பட்டது.
இதில் சந்தானம் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிகே என்ற ஹிந்தி திரைப்படத்தில் அமீர்கான் போஸ் கொடுக்கும்போது பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது.
அதைப்போல இப்படத்தின் போஸ்டரும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஊரடங்கால் பலரும் கடும் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வரும் இந்த வேளையில் அரை நிர்வாண போஸ்டர்கள் தேவையா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.