விஜய், சன் டிவிகளில் வந்த கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிமிக்ரி செய்து புகழ்பெற்றவர் ஆதவன். தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட ஆதவன் தற்போது சன் டிவியில் முழு நேர தொகுப்பாளராக இருக்கிறார்.
இவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நண்பர்கள் அதிகம். ஸ்ம்யூல் உள்ளிட்ட வலைதளங்களில் ரசிகைகளும் அதிகம். நன்றாக பாடக்கூடியவர் இவர்.
மிமிக்ரி, பாடல் என அனைத்திலும் கலந்து கட்டி கலக்கும் ஆதவன் சமீப கொரோனா ஹாலிடேஸில் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் கலந்துரையாடி வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலும் ஆரம்பித்து நடத்தி வருகிறார். இதில் மிமிக்ரி, சினிமா திரை விமர்சனம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். சமீபத்தில் கூட பொன்மகள் வந்தாள் படத்தின் விமர்சனத்தை வழங்கி உள்ளார்.