ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தும் பெரிதாக வரவேற்கப்படவில்லை. இந்நிலையில் அப்படத்தின் தோல்விக்கான காரணம் பற்றி பேசியுள்ளார் சித்ரா லட்சுமணன்.
கடந்த சில ஆண்டுகளாக தர்பார், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களால் தோல்விகளையே சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. நெல்சன் மற்றும் ரஜினியின் காம்பினேஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி ஜெயிலர் படம் வெற்றிப்பெற அனிருத்தும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்திருந்தார்.
லால் சலாம் தோல்விப் படம்:
அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் தன் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். லைகா நிருவனத்தின் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். கிரிக்கெட்டின் மூலம் நடக்கும் மதப் பிரச்சனையை மையமாக கொண்டு எடுத்துள்ள இப்படத்தில் ரஜினி கேமியோ ரோல் என்றாலும் 45 நிமிடங்கள் மொய்தீன் பாயாக நடித்து பட்டையை கிளப்பியும் லால் சலாம் தோல்வியடைந்துள்ளது.
லால் சலாம் வெற்றிப் பெறாததற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ராமர் கோவிலின் திறப்பு விழாவுக்கு செல்வது போன்று பாஜகாவை மறைமுகமாக ஆதரித்து வருகிறார் என விமர்சனங்கள் பரவின. தமிழ்நாட்டில் பாஜகாவை எப்போதும் ஆதரிப்பது இல்லை ஆனால் ரஜினி அவருடன் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வது அரசியல் ரீதியான காரணமாக இருக்கும் எனவும் விமர்சித்தனர்.
ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகல:
மேலும் லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என் அப்பா சங்கி இல்லை அதை இந்த படம் பார்த்தால் அனைவரும் அறிந்து கொள்வீர்கள் என பேசியது சர்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ரஜினி சங்கி என்பது தப்பான வார்த்தை இல்லை என விளக்கினார். தொடர்ந்து அவரை விமர்ச்சித்து வந்ததே இப்படதின் தோல்விக்கு காரணமாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இதை தொடர்ந்து லால் சலாம் படத்தின் தோல்வி குறித்து சித்ரா லட்சுமணன் பேசுகையில், லால் சலாம் படத்தின் இரண்டாம் பாதி சொதப்பலாக உள்ளது என கூறுகின்றனர். மேலும், ப்ளூ சட்டை மாறன் கூறிய அளவிற்கு மோசமாக இல்லை என்றாலும் அப்படம் பல நெகடிவ் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அந்த படத்தை நான் பார்க்காமல் அது தோல்வி படம் என கூறுவதற்கு காரணம் அது முதல் நாளே ஒரு ஷோ கூட ஹவுஸ்ஃபுல் ஆகாத படம் என்ற சாதனையை பெற்றுள்ளது என கூறியுள்ளார்.